வரலாறு

White oxenfort university 1.png
White oxenfort university 1.png

எமது பாடசாலை வரலாற்றை சுருக்கமாக நோக்குகையில் 1957.07.01ல் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயரில்; பாலமுனை பெரிய பள்ளவாசலுக்கு அருகாமையில்; சமூக நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் தற்காலிக ஓலைக் கொட்டில்களால் அமைக்கப்பட்ட வகுப்பறைகளில்  தரம் 1 தொடக்கம் 5வரை(வுலிந -ஐஐஐ) மாணவர்கள் உள்வாங்கப்பட்டு முதல் தலைமை ஆசிரியராக திரு எஸ்.எச்.எம்.கபுர் அவர்களுடன் ஏனைய உதவி ஆசிரியர்கள் 05பேருமாக நியமிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

மாணவர்களின் தொகை அதிகரித்த காரணத்தினால் இடவசதியை கருத்திற் கொண்டும் நிரந்தர கட்டடத்தை அரசியல்வாதிகளின் பங்களிப்புடன் அமைத்து கடற்கரை வீதியில் தற்போது இப்னு ஸீனா ஜுனியர் கல்லூரி அமைந்த இடத்திற்கு மாற்றப்பட்டது.காலப்போக்கில் 1986ஆம் ஆண்டளவில் அப்போதைய அதிபராக இருந்த மர்ஹ{ம் ஏ.ஏ.யு.லெவ்வை அவர்களின் முயற்சியால் தரம் 11வரைக்கும் க.பொ.த(சா.த) (வுலிந -ஐஐ) ஆரம்பிக்கப்பட்டது.அத்துடன் மினி விஞ்ஞான ஆய்வுகூடமும் அமைக்கப்பட்டது.

காலப்போக்கில் கல்வியின் ஆர்வம் அதிகரித்ததன் காரணமாக பெற்றோர்களின் பங்களிப்புடன் பாடசாலையின் பெயரையும் தரத்தையும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு 1990ஆம் ஆண்டளவில் அப்போதைய அதிபராக சேவையாற்றிய ஏ.சாஹ{ல்ஹமீது மற்றும் ஊர் நலன்விரும்பிகளனதும் முயற்சியால் மின்ஹாஜ் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றப்பட்டதோடு உயர்தர பிரிவு ஆரம்பிப்பதற்கு (கலை) (வுலிந -1ஊ)அனுமதியளிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் வகுப்பறை கட்டடங்கள் அரசியல்வாதிகள்,கல்வித் திணைக்களங்கள் மூலமும் நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்டது. மாணவர்களின் அதிகரிப்பு, இடவசதி போதாமை என்பவற்றை கருத்திற்கொண்டு அப்போதைய அதிபராக இருந்த எஸ்.எம்.எம்.ஹனிபா அவர்களின் பங்களிப்புடன் சுனாமி அனர்த்தத்தின் போது கிடைக்கப்பெற்ற புதிய இரண்டு மாடிக்கட்டடம், நிருவாக கட்டடம் என்பவற்றை பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் பாடசாலைக்கு பெறப்பட்ட 5ஏக்கர் காணியில் நிறுவப்பட்டது. இப்பாடசாலை ஆயிரம் பாடசாலை திட்டத்தில் 2012ம் ஆண்டு உள்வாங்கப்பட்டதன் காரணமாக தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரைக்குமான வகுப்புக்கள் நடைபெற வேண்டும் என்ற அடிப்படையில.; முழுமையா இப்பாடசாலையானது பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் உள்ள புதிய இடத்துக்கு மாற்றப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தொழிநுட்ப ஆய்வுகூடம், வசதியான மலசலகூடம் என்பன அமைக்கப்பட்டது. அத்துடன் 2012ம் ஆண்டு வர்த்தகத்துறையானது ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் வந்த அரசியல் மாற்றத்தின் மூலம் தற்போதைய அதிபர் கே.எல்.உபைத்துல்லா அவர்களின் முயற்சியால் அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை (தரம்-யு)எனும் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திருத்த வேலை, இரண்டு வகுப்பறை கொண்ட கட்டடம், மூன்று மாடிக் கட்டடம் என்பன கட்டி முடிக்கப்பட்டன.அத்துடன் 13வருட கல்வித் திட்டத்தில் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டு இரண்டு மாடிக் கட்டடமும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.மேலும் இவ்வுரின் நீண்டகால தேவையாக இருந்த விஞ்ஞான உயர்தர பிரிவு எமது வளத்தை பயன்படுத்தி கல்வித் திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 2018ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.மேலும் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் அரசின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் எமது பாடசாலையும் 2021ம் ஆண்டு உள்வாங்கப்பட்டது.

இப்பாடசாலையின் பாடவிதான வளர்ச்சியில் பல மாணவர்களை பல்கலைக் கழகத்திற்கும் மற்றும் ஏனைய பதவிகளுக்கும் நல்ல பல ஆளுமைகளை உருவாக்கியிருப்பதோடு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தேசிய, மாகாண , மாவட்ட, வலய, கோட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றி சாதனைகள் படைக்கப்பட்டு பறைசாற்றியுள்ளது.

மேலும் இப்பாடசாலையின் வளர்ச்சியில் ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரின் ஒத்துழைப்பு கிடைத்துக் கொண்டிருப்பதோடு மேலும் இறைவன் உதவியால் பலசாதனைகள் நிலைநாட்ட மாணவர்களை எதிர்பார்த்து பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம்.

  • பாடசாலையின் இடவமைப்பு
  • மாகாணம் : கிழக்கு மாகாணம்
  • மாவட்டம் : அம்பாரை
  • பிரதேச செயலகப் பிரிவு : அட்டாளைச்சேனை
  • கிராம சேவகர் பிரிவு : பாலமுனை -04
  • கல்வி மாவட்டம் : கல்முனை
  • கல்வி வலயம் : அக்கரைப்பற்று.
  • கல்விக் கோட்டம் : அட்டாளைச்சேனை.
    இது ஒரு கிராமப்புர பாடசாலையாகக் கருதப்படுகின்றது.