கமு/அக்/மின்ஹாஜ் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) பாலமுனை பாடசாலை ஒழுக்க நெறிக்கோவை
1) எமது பாடசாலையின் தூரநோக்கு (vision), பணிக்கூற்று (mission), மகுடவாசகம் (motto) என்பவற்றை அறிந்திருப்பதோடு, மாணவர்கள் ஆற்றும் எக்கருமமும் பாடசாலையின் தூர நோக்கினை எய்துவதற்கான தாகவே அமைதல் வேண்டும்.
2) பாடசாலை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும். மாணவர்கள் காலை 7.20 மணிக்கு முன் பாடசாலைக்கு சமுகமளிப்பதோடு பாடசாலை முடியும் வேளை வரைக்கும் பாடசாலையில் இருத்தல் வேண்டும்.
3) மாணவர்களின் வரவு மிகத்திருபதியான முறையில் அமைந்திருத்தல் வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால் பாடசாலைக்கு சமுகமளிக்க முடியாத நிலை ஏற்படின், பெற்றோர் ஃ பாதுகாவலர் எழுத்து மூலம் அதிபரிடம் அனுமதி பெறுதல் வேண்டும்.
4) i) பாடசாலை நாட்கள் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் மாணவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாயின் உரிய முறையில் முன்கூட்டியே அதிபரிடமிருந்து அனுமதி பெறப்பட்டிருத்தல் வேண்டும்.
ii) மாணவர்கள் நியாயமான காரணத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்வதாயின் அதிபரிடம் அனுமதி பெறப்படுவதோடு, தடைப்பட்ட கற்றலை நிறைவு செய்வதற்கான முன்திட்டம் அதிபரிடம் ஒப்புவிக்கப்படல் வேண்டும்.
5) பாடசாலைக்குச் சமுகமளித்தல், பாடசாலை வைபவங்களில் பங்குகொள்ளல், பரீட்சைக்குத் தோற்றுதல் வெளி நிகழ்வுகளில் கலந்து கௌ;ளுதல் போன்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் பாடசாலைச் சீருடையை அணிந்திருத்தல் அவசியமானதாகும்.
பாடசாலைச் சீருடை
தரம் 6 - 13 ஆண் மாணவர்கள் : வெள்ளை நிற கட்டைக் கை சேட், வெள்ளை நிற தளர்வான நீளக் காற்சட்டை, வெள்ளைத் தொப்பி, பாடசாலைச் சின்னம், கறுப்புநிற சப்பாத்து, காலுறை அணிதல் வேண்டும்.
தரம் 6 - 13 பெண் மாணவர்கள் : வெள்ளை நிற சட்டை, காற் சட்டை, பர்தா அணிவதுடன் பாடசாலைச் சின்னம், வெள்ளை நிற சப்பாத்து, காலுறை அணிதல் வேண்டும். பாடசாலைச் சீருடையில் எவ்வித சிறிய, பெரிய மாற்றங்களும் செய்யப்படல் ஆகாது.
6) ஆண் மாணவர்கள் நவீன பாணியில் தலைமுடி வெட்டுதல், தலை முடி, மீசை வளர்த்தல் என்பன தவிர்க்கப்படல் வேண்டும். பெண் மாணவிகள் உதடு, தலைமுடி மற்றும் நகம் போன்றவற்றிற்கு வர்ணச்சாயம் பூசுதல், வெளியில் தெரியும் படியாக தங்க ஆபரணங்கள் அணிதல் மற்றும் பொருத்தமற்றது என பாடசாலை நிருவாகத்தினால் கருதப்படுகின்ற ஆடை, சிகை அலங்காரம் என்பவற்றை முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
7) மாணவர்கள் சுயசுத்தத்தில் கவனம் செலுத்துவதுடன் வகுப்பறையினதும், பாடசாலையினதும் சுத்தத்தைப் பேணுவதில் பங்களிப்பு செய்தலும் கட்டாயமானதாகும்.
8) பாடசாலைச் சொத்துக்களைப் பாதுகாத்தல், சரியான முறையில் பராமரித்தல் என்பன மாணவர்களது கட்டாய பொறுப்பாகும்
9) கையடக்கத் தொலைபேசிகள், இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவற்றைப் பாடசாலை வளாகத்திற்குள் கொண்டுவருதல், பயன்படுத்தல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
10) மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை அதிக கவனத்தோடு பயன்படுத்துவதுடன் தினமும் அவற்றைப் பாடசாலைக்குக் கொண்டுவருதல் வேண்டும். பாடசாலையில் நடாத்தப்படுகின்ற அலகுப்பரீட்சை, தவணைப்பரீட்சை ஏனைய அறிவிக்கப்படும் பரீட்சைகளுக்குக் கட்டாயம் தோற்றுதல் வேண்டும்.
11) பெரியோரை கனம் பண்ணுதல், மதிப்பளித்தல், கீழ்ப்படிதல் போன்றவற்றைத் தாமாக உணர்ந்து செயற்படல் வேண்டும்.
12) எல்லா மணவர்களும் சக மாணவர்களோடு அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்வதோடு, வகுப்புத்தலைவர். மாணவத்தலைவர்கள், சிரே~;ட மாணவத்தலைவர் ஆகியோரை மதித்து நடத்தல் வேண்டும்.
13) அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களோடும் ஏனைய அதிதிகள், உத்தியோகத்தர்களுடனும் மிக்க மரியாதையாக நடந்து கொள்ளுதல் வேண்டும்.
14) மாணவர்கள் தமக்குரிய மத, கலாசார பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் கடைப்பிடிப்பதோடு ஏனைய மத, கலாசாரங்களுக்கும் மதிப்பளித்தல் வேண்டும்.
15) பாடசாலைக்கு வரும் போதும். கலைந்து செல்லும் போதும் அமைதியாகவும் வீதி ஒழுங்குகளை பின்பற்றியும் ஒழுகுதல் வேண்டும்.
16) பாடசாலையினுள்ளேயும், வெளியேயும் பாடசாலையின் நற்பெயருக்குப் பங்கம் ஏற்படாத வகையில் மாணவர்கள் செயற்படுவதுடன் பாடசாலையின் கௌரவத்தைப் பேணும் வகையில் நடந்து கொள்ளல் வேண்டும்.
17) பாடசாலையின் ஒழுக்க விழுமியங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாணவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஈடுபடலாகாது. அவ்வாறு நடந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் கல்வி அமைச்சின் ED/01/12/09/24 ஆம் இலக்க சுற்று நிருபத்திற்கமைவாக, பாடசாலை ஒழுக்காற்றுசபை எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் கட்டுப்படல் வேண்டும்.
18) மாணவர்களுக்கு இடம்பெறும் எவ்வித விரும்பத்தகாத சம்பவங்களையும் முதலில் ஆசிரியர், அதிபரிடம் தெரியப்படுத்தல் வேண்டும். மாறாக, பெற்றோர் சுயமாக எடுக்கும் எந்நடவடிக்கைக்கும். வெளியில் நடைபெறும் எவ்விடயத்திற்கும் பாடசாலை வகை கூறாது.
19) தடைசெய்யப்பட்ட ஓளடதங்கள் மற்றும் ஆபத்துமிக்க பொருட்கள் என்பவற்றை கொண்டு வருதல், வைத்திருத்தல் என்பவற்றை தவிர்த்தல்.
குறிப்பு :
அவ்வப்போது அரசினாலும், பாடசாலையாலும் வெளியிடப்படும் அறிமுகப்படுத்தப்படும் ஒழுக்கநெறிகளை கடைப்பிடிக்க வேண்டும்.





