Akkaraipattu
எமது பாடசாலை வரலாற்றை சுருக்கமாக நோக்குகையில் 1957.07.01ல் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயரில்; பாலமுனை பெரிய பள்ளவாசலுக்கு அருகாமையில் சமூக நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் தற்காலிக ஓலைக் கொட்டில்களால் அமைக்கப்பட்ட வகுப்பறைகளில் தரம் 1 தொடக்கம் 5வரை (Type -III) மாணவர்கள் உள்வாங்கப்பட்டு முதல் தலைமை ஆசிரியராக திரு எஸ்.எச்.எம்.கபுர் அவர்களுடன் ஏனைய உதவி ஆசிரியர்கள் 05பேருமாக நியமிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது
ஆத்மீகத்துடனான திறன்கொண்ட மாணவர் சமூகம்
தகுதிமிக்க ஆசிரியர்கள் | ஆத்மீக விழிப்புணர்வு | நவீன கற்றல் சாதனங்கள் | பௌதீக வளங்கள் | சிறந்த நடைமுறைகள் |வினைத்திறன்மிக்க நிருவாகம் | சிறந்த பாடசாலை சூழல் | சிறந்த தொடர்பாடல் போன்றவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆத்மீகத்துடனான திறன்களை கற்று அதன்வழி நடக்கும் மாணவர் சமூகத்தை உருவாக்குதல்.