மாணவர்களை நவீன வேலை உலகிற்கு தயார் செய்து அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவென'எமது பாடசாலையில் #YOUNG #INVENTORS #CLUB மூலமாக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் பல்வேறு போட்டி நிகழ்வுகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்ற வாரம் திருகோணமலையில் இளம் கண்டுபிடிப்பாளர்களை இனங்கண்டு அவர்களை நெறிப்படுத்தி நாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் எமது பாடசாலை மாணவர் M.N.ஆதீப் திருகோணமலையில் நடைபெற்ற போட்டியில் ஆக்கங்களுடன் பங்கு பற்றியிருந்தார் இவருக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.மேலும் BMICHயில் நடைபெறும் போட்டியில் பங்குபற்றுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.......
இதற்காக பல்வேறு வழிகாட்டல்களை வழங்கிய பாடசாலை முதல்வர் அவர்களுக்கும் #YOUNG #INVENTORS #CLUB (இளம் புத்தாக்குனர் கழகம்) பொறுப்பாசிரியர்கள், விஞ்ஞானப் பாட ஆசிரியர்கள்,ICT பாட ஆசிரியர்கள் பங்கு பற்றிய மாணவர் என யாவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறோம்.
தகவல்-
#உதவி #அதிபர்
இணைப்பாட விதானம்





