நடைபெற்று முடிந்த 2026 கோட்டமட்ட பெரு விளையாட்டுப் போட்டியில் அபார வெற்றி பெற்று எமது வீரர்கள் வலய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை பயிற்றுவித்த சிரேஷ்ட ஆசிரியர் ILM.பாயிஸ்,பயிற்றுவிப்பாளர்களான AM.இர்ஸாத், MJM.சபான் மற்றும் வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வருடம் (2026)
எல்லே
கிறிக்கட்
உதைபந்து - 16 வயது
உதைபந்து-18 வயது
உதைபந்து - 20 வயது
பிரிவுகளில் வலய மட்ட போட்டியில் கலந்து கொள்கிறது.
இதற்காக ஒத்துழைப்பும் பயிற்சியும் வழங்கிய ஆசிரியர்
#S_சசிகுமார் மற்றும் அவரது பெற்றோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.இம்மாணவன் தேசிய மட்ட போட்டியில் வெற்றிபெற பிரார்த்திக்கி
ன்றோம்.
இன்று அதிபர் அல்ஹாஜ் KL.உபைத்துல்லா அவர்களின் தலைமையில் ஆசிரிய நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் மௌலவி ஆசிரியர்AM.சகாப்தீன் அவர்களினால் சிறப்புரையாற்றப்பட்டது.
#கலை கலாசார மேம்பட்டு உபகரணங்கள் கையளிப்பு.
..........................................
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மன்றங்களின் கலை நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உபகரணங்கள் கடந்த புதன்கிழமை சுதந்திர தினத்தன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இதற்கமைய எமது பாடசாலையில் பதிவு செய்யப்பட்ட மின்ஹாஜ் கலை மன்றத்திற்காக கடந்த வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட PSDG நிதியில் கலை கலாசார மேம்பாட்டு ,ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அதிதிகள்:
பிரதேச செயலாளர் : AC. Ahamed Afkar
கணக்காளர் : FM. Farhan
உதவி திட்டமிடல் பணிப்பாளர் : M. Joufar
மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் : AL. Thoufeek
கலாச்சார உத்தியோகத்தர் - MS. ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர்